மோடி- அமித்ஷா ஆட்சியில் தேர்தல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்; எதிர்க்கட்சிகள் வேதனை
rss_feed · 03 Jul 2026 · India political signal brief

கடந்த ஜூன் 8 அன்று நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் 21 அரசியல் கட்சிகளும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் பங்கேற்றனர். அதில், எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் தொடர்பான பிற விவகாரங்கள் குறித்து தலைமை நீதிபதிக்கு ஒரு கூட்டுக் கடிதம் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 24 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினரின் கையெழுத்துக்களுடன் கூடிய கூட்டுக் கடிதம் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், அவர் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் தேர்தல் ஜனநாயகம் மோசமான நிலையை எட்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “ நமது நாட்டின் தேர்தல் ஜனநாயகமானது நரேந்திர மோடி- அமித்ஷா தலைமையிலான ஆட்சியில் மிகக் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.

கடந்த ஜூன் 28 அன்று, 24 எதிர்க்கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர், இந்தியத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை எழுதினர். அதில், குறைபாடுகள் நிறைந்த எஸ்.ஐ.ஆர் செயல்முறை, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான செயல்பாடுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற விவகாரங்கள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிர்வாகத் (அரசு) துறையின் வரம்பு மீறிய செயல்பாடுகளிலிருந்தும், நமது நாட்டின் ஜனநாயகத்திற்கு அடிப்படையாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பையே சிதைக்கத் துடிக்கும் ஒரு நிர்வாகத்திடமிருந்தும் (பாஜக அரசு), ஜனநாயகத்தைக் காப்பது நமது நீதித்துறையின் கடமையாகும்.

நமது ஜனநாயக அமைப்பில், அநீதி இழைக்கப்படுவதைத் தடுக்கும் பெரும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதிலும், அதே சமயம் தேர்தல்கள் நியாயமான முறையில் தான் நடைபெறுகிறது என்பதை மக்கள் உணரும் சூழலை உருவாக்குவதிலும் உச்ச நீதிமன்றம் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. தவறும்பட்சத்தில், 140 கோடி வாக்காளர்களுக்கும் இழைக்கப்படும் அநீதி, ஒவ்வொரு நாளும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

வெளிப்படைத்தன்மையைக் கருத்தில் கொண்டும், கோடிக்கணக்கான மக்களின் தேர்தல் செயல்முறை மீதான நம்பகத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் உச்ச நீதிமன்றம் அவசரமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன், இந்தக் கடிதத்தை நாங்கள் வெளியிடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

“மோடி- அமித்ஷா ஆட்சியில் தேர்தல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்; எதிர்க்கட்சிகள் வேதனை கடந்த ஜூன் 8 அன்று நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் 21 அரசியல் கட்சிகளும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் பங்கேற்றனர்.”
Who and what this moves
Related coverage
Signal brief generated from live monitored coverage of India politics. Entities resolved against the IndiaTick taxonomy; follow the links above for each entity’s full command center.