“மக்களுக்கு சர்ப்ரைஸ் தொடர்கிறது” - முதல்வர் விஜய் குறித்து ஆர்.பி. உதயகுமார் காட்டம்!
rss_feed · 05 Jul 2026 · India political signal brief
<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/nakkheeran/media/media_files/2026/07/05/rb-udhayakumar-cm-vijay-2026-07-05-10-57-36.jpg" /><p style="text-align: justify;">பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முதல்வர் விஜய்யின் பார்வைக்குத் தினந்தோறும் போக வேண்டிய உளவுத்துறை அறிக்கை முதல்வர் விஜய்க்கு போவதற்கு முன்பாகவே மூன்று அதிகார மையங்களுக்கு உளவுத்துறை அறிக்கை செல்வதாக சர்ப்ரைஸ் செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. முதல்வர் பார்த்த பிறகுதான் அந்த செய்தி விவாதிக்கப்பட வேண்டும் என்கிற நிலையிலே மூன்று அதிகார மையங்கள் உளவுத்துறை அதிகாரிடத்திலே உளவுத்துறை அறிக்கை குறித்து விவரங்களைக் கேட்பது உளவுத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. </p> <p style="text-align: justify;">சட்ட ரீதியாக உளவுத்துறை அறிக்கையை முதல்வர் பார்வைக்குச் செல்லும் முன்பாக வேறு யாரும் பார்க்கக்கூடாது. இதுதான் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது. முதல்வர் பார்வைக்கு மட்டுமே செல்ல வேண்டிய அறிக்கையை ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட அதிகார மையத்திற்குச் செல்லும்போது அரசின் ரகசியங்கள் வெளியே கசிய அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் மக்களின் கவலையாக இருக்கிறது. மேலும் அரசின் நம்பகத் தன்மை பாதிக்கப்படும் என்கிற சர்ப்ரைஸும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதல் முயற்சியிலேயே ஆட்சி அதிகாரம் என்று முதல்வர் விஜய் பூரித்துப் போயிருந்தாலும் பேச வேண்டிய நேரத்தை எல்லாம் பேசாமல் மௌனம் காப்பது மக்களுக்கு சர்ப்ரைஸ் தொடர்கிறது </p> <p style="text-align: justify;">சரி முதலமைச்சர்தான் இப்படி என்றால் அமைச்சர்கள் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் கூட விரைவிலே தங்கள் பண்புகளை வளர்த்துக் கொள்வார்கள் என்று இந்த நாட்டு மக்கள் நம்பினார்கள். ஏன் முதலமைச்சர் விஜய் அவர்களும் நம்பினார். ஆனால் அமைச்சர்கள் தகுதியை வளர்த்து கொள்ளாமல் அடாவடியிலே ஈடுபட்டு வருவது மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.</p>
““மக்களுக்கு சர்ப்ரைஸ் தொடர்கிறது” - முதல்வர் விஜய் குறித்து ஆர்.பி. உதயகுமார் காட்டம்! பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.”
Who and what this moves
Related coverage
Signal brief generated from live monitored coverage of India politics. Entities resolved against the IndiaTick taxonomy; follow the links above for each entity’s full command center.