IndiaTick
LIVEहिन्दी▶ STRATEGIST MODELOGIN
India Live Feed
Signals
Live signalsSYNCLeader heatUPIssue pressureUPMedia spikeSCANAlliance talkWATCHFresh coverageNEWLive signalsSYNCLeader heatUPIssue pressureUPMedia spikeSCANAlliance talkWATCHFresh coverageNEW
Dashboard / News / திருமண வரவேற்பு விழாவில் உதயநிதி - சீமான் சந்திப்பு : பரஸ்பரம் நலம் விசாரிப்பு!
Home / News / 05 Jul 2026

திருமண வரவேற்பு விழாவில் உதயநிதி - சீமான் சந்திப்பு : பரஸ்பரம் நலம் விசாரிப்பு!

rss_feed · 05 Jul 2026 · India political signal brief

சென்னையடுத்துள்ள திருவேற்காட்டில் திமுகவில் தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் கஜா வீட்டு இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி  இன்று (05.07.2026) நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒன்றாகப் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அப்போது இருவரும் மேடையில் அருகருகே ஒன்றாக அமர்ந்திருந்தனர்.  அதோடு அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். கை குலுக்கி கொண்டனர்.

அதன், பின்னர் மணமக்களுக்குப் பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, மேடையில் இருந்த திமுக நிர்வாகி கஜா உள்ளிட்டோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், அவர்களைப் பாராட்டியும் பெருமையாகப் பேசியும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினும் சீமானும் மேடையில் அருகருகே அமர்ந்து சுமுகமாக உரையாடிக் கொண்டிருந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதும் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இத்தகைய செயல் தீவிர அரசியல் விமர்சனங்களைத் தாண்டி, பொது வாழ்விலும் சமூக உறவுகளிலும் பேணப்படும் இந்த 'தமிழர் மாண்பு' மற்றும் நாகரிக அரசியல் நகர்வு விழாவுக்கு வந்திருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக திரைப்பட இயக்குநரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் முக்கிய ஆளுமையுமான வ. கௌதமன் இல்லத் திருமண வரவேற்பு விழா புதுச்சேரியில் கடந்த மாதம் 24ஆம் தேதி (24.06.2026) விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதற்காகத் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஒரே நேரத்தில் வருகை தந்தனர்.

இதனையடுத்து மேடைக்குக் கீழே போடப்பட்டிருந்த சிறப்புப் பிரமுகர்களுக்கான வி.ஐ.பி வரிசையில், மு.க.ஸ்டாலின், வைகோ மற்றும் சீமான் ஆகியோர் அடுத்தடுத்த இருக்கைகளில் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது, மூன்று தலைவர்களும் பரஸ்பரம் கைகுலுக்கி, புன்னகையுடன் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டு சிறிது நேரம் சுமுகமாகக் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

“திருமண வரவேற்பு விழாவில் உதயநிதி - சீமான் சந்திப்பு : பரஸ்பரம் நலம் விசாரிப்பு! சென்னையடுத்துள்ள திருவேற்காட்டில் திமுகவில் தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் கஜா வீட்டு இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி  இன்று (05.07.2026) நடைபெற்றது.”

— rss_feed

Who and what this moves

Related coverage

Signal brief generated from live monitored coverage of India politics. Entities resolved against the IndiaTick taxonomy; follow the links above for each entity’s full command center.