வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக- பிண்டம் வைத்து திதி கொடுத்து நூதன போராட்டம்
rss_feed · 05 Jul 2026 · India political signal brief
<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/nakkheeran/media/media_files/2026/07/05/7587-2026-07-05-20-05-11.jpg" /><p style="text-align: justify;">நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, "கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்" என்று தற்போதைய ஆளும் தவெக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு இதுவரை முழுமையாகச் செயல்படுத்தப்படாமல், காற்றில் பறக்கவிடப்பட்டு 'உயிர்விட்டுவிட்டது' என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.</p> <p><img alt="7586" src="https://img-cdn.publive.online/fit-in/580x348/filters:format(webp)/fit-in/580x348/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/07/05/7586-2026-07-05-20-05-23.jpg" style="width: 1200px;" /></p> <p style="text-align: justify;">இதனைக் கண்டித்து, மறைந்த தேர்தல் வாக்குறுதிக்குக் கடற்கரையில் திதி கொடுத்து, பிண்டம் கரைக்கும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் விஜயராஜ், மாவட்டச் செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தமிழக அரசுக்கு எதிரான கோரிக்கைகள் மட்டுமன்றி, காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தாமல், மத்திய அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருவதையும் கண்டித்து இந்த போராட்டத்தில் விவசாயிகள் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.</p>
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக- பிண்டம் வைத்து திதி கொடுத்து நூதன போராட்டம் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது.”
Who and what this moves
Related coverage
Signal brief generated from live monitored coverage of India politics. Entities resolved against the IndiaTick taxonomy; follow the links above for each entity’s full command center.