IndiaTick
LIVEहिन्दी▶ STRATEGIST MODELOGIN
India Live Feed
Signals
Live signalsSYNCLeader heatUPIssue pressureUPMedia spikeSCANAlliance talkWATCHFresh coverageNEWLive signalsSYNCLeader heatUPIssue pressureUPMedia spikeSCANAlliance talkWATCHFresh coverageNEW
Dashboard / News / தூய்மைப் பணியாளரை தாக்கிய தவெக நிர்வாகி-வழக்குப் பதிவு செய்யாத காவல்துறை
Home / News / 05 Jul 2026

தூய்மைப் பணியாளரை தாக்கிய தவெக நிர்வாகி-வழக்குப் பதிவு செய்யாத காவல்துறை

rss_feed · 05 Jul 2026 · India political signal brief

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப் பணியாளராக ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் தூய்மை பணி செய்துவிட்டு கிளம்பிய நிலையில் பழையனூர் பகுதியைச் சேர்ந்த உதயபிரகாஷ் (த.வெ.க நிர்வாகி ) என்பவர் தூய்மை பணியாளர் ராஜ்குமாரை தடுத்து நிறுத்தி "ஏன் நீ பழையனூர் ஊராட்சியிலல்லாம் குப்பை அள்ளமாட்டியா, குப்பை அள்ளுற உனக்கு என்ன கவுரவம் வேண்டி கிடக்கு" என கடினமான வார்த்தைகளை எடுத்த எடுப்பிலேயே போட்டுப் பேசியிருக்கிறார்.

"நான் கொத்தங்குடி ஊராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர், பழையனூர் ஊராட்சி பகுதியில் எப்படி நான் தூய்மைப் பணியை மேற்கொள்ள முடியும்," என தூய்மைப் பணியாளர் ராஜ்குமார் கூற, ஆத்திரமடைந்த உதய பிரகாஷ் மற்றும் உடன் நின்ற அவரது தந்தை உள்ளிட்ட மூன்று நபர்கள் தூய்மைப் பணியாளர் ராஜ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியபடியே அடித்துள்ளனர். காயமடைந்த தூய்மைப் பணியாளர் ராஜ்குமார் 'நமக்குன்னு கேட்க நாதியில்லையா?' என்கிற மனவேதனையோடு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூய்மைப் பணியாளரைத் தாக்கிய உதய பிரகாஷ் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்பதால் அவர் மீது காவல்துறையினர் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. 53 வயதான தூய்மைப் பணியாளரை தாக்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொத்தங்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“தூய்மைப் பணியாளரை தாக்கிய தவெக நிர்வாகி-வழக்குப் பதிவு செய்யாத காவல்துறை திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப் பணியாளராக ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.”

— rss_feed

Who and what this moves

Related coverage

Signal brief generated from live monitored coverage of India politics. Entities resolved against the IndiaTick taxonomy; follow the links above for each entity’s full command center.